உலக கிண்ண கல்ப்பந்த்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய அணிகளைப் பற்றி சரியான எதிர்வு கூறல்களை முன்வைத்த" போல் " எனும் ஒக்டோபஸ் நேற்று ஜேர்மனியில் உள்ள நீரியல் பூங்காவில் வைத்து உரிழந்த்துள்ளது.
மேலும் இந்த ஒக்டோபசிற்காக நினைவுச் சிலையொன்றும் அமைக்கப்படவுள்ளதாக நீரியல் பூங்கா உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tuesday, October 26, 2010
Monday, October 25, 2010
வைத்தியசாலை தாதியர் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்
கொழும்பு வைத்தியசாலை விபத்து பிரிவின் முன்பு அரச மருத்துவ தாதியர் சங்கத்தினர் காலை 8 மணி தொடக்கம் 11 மணி வரை 3 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வைத்தியசாலையில் தாதியினர் முகம் கொடுக்கும் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று தருமாறு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்தியர் சங்கம் தாதி சேவை யாப்பில் திருத்தத்தினை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் வைத்தியர் சங்கம் தாதி சேவை யாப்பில் திருத்தத்தினை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Thursday, October 21, 2010
Wednesday, October 20, 2010
ஆணைக்குழுவை நிராகரித்த சர்வதேச மனித உரிமைக் குழுக்களை லண்டனில் கடுமையாகச் சாடினார் பீரிஸ்
இலங்கையின் யுத்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கானஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதை மனித
உரிமைகளுக்கான சர்வதேசக் குழுக்கள் நிராகரித்ததை காலனித்துவத் தன்மை வாய்ந்தது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சாடியுள்ளார்.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகமும், லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையும், பிரசெல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழுவும் இலங்கையின் குழுவை விமர்சித்திருந்ததுடன், சாட்சியமளிக்க முன்வருமாறு அக்குழு விடுத்திருந்த அழைப்பையும் நிராகரித்திருந்தது.
லண்டனைத் தளமாகக் கொண்ட முன்னணி புத்திஜீவிகள் நிறுவனமான தந்திரோபாய கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமைச்சர் பீரிஸ்,உரிமைகளுக்கான குழுக்கள் கவனத்தை ஈர்க்காத தன்மையை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார். இது அநேகமாக காலனித்துவத் தன்மை வாய்ந்த போக்காகும்.
போஷித்தல்,சாதகமாக்குதல் என்பன காலனித்துவத் தன்மை வாய்ந்தவையாகும். இலங்கையர்கள் தமது சொந்த எதிர்காலத்தை வகுத்துக்கொள்ள இயலாதவாறு ஏனையோர் தலையிடுவதான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது கடந்த ஆகஸ்ட் முதல் அமர்வுகளை நடத்தி வருகிறது. முன்னாள் யுத்த வலயங்களைச் சேர்ந்த தமிழர்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்திருப்பதாக அக்குழு தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் இடம்பெறும் அமர்வுகளுக்கு சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
லண்டனில் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவானது தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள ஆணைக்குழுக்களை ஒத்ததொன்று என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)





