Wednesday, September 29, 2010

கொழும்பு பல்கலைக்கழக மோதலில் ஐவர் காயம்

0 comments
 

  கொழும்புப் பல்கலைக்கழகத்தில்  கலைப்பிரிவில்   இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த மாணவர்கள் ஐவரும் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹெக்டர் வீரசிங்க குறிப்பிட்டார்.

சிகிச்சையின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளார் தெரிவித்தார். இதனால் பல்கலைக்கழக கலைப்பிரிவு  கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. என பல்கலைக்கழக ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

Sunday, September 26, 2010

அதிகளவு வீதி விபத்து மரணங்கள் குருநாகலில் பதிவு

0 comments
வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம்  வரையிலான காலப்பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்துகளில் 167 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் தற்போதுள்ள சமாதானச் சூழலில் வடமேல் மாகாணத்தினூடாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்த விபத்துகள் சம்பவித்துள்ளதாக வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் லியூவ்கே குறிப்பிட்டார்.

இதனையடுத்துப் பாடசாலை ஆரம்பிக்க முன்னரும் நிறைவடைந்த பின்னரும் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் போக்குவரத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்யவுள்ளதாகவும் இது குறித்து மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் சொன்னார்.

Thursday, September 9, 2010

B .T .I பக்டீரியா இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

0 comments
டெங்கு   தடுப்பு  மருந்தான  B .T .I   பாக்டீரியாவை  கியூபாவிலிருந்து  இலங்கைக்கு  கொண்டுவரும் கப்பல்  நேற்று கொழும்பு  துறைமுகத்தை  வந்தடைந்தது . இதில் வரும் மருந்தைக் கொண்டு இலங்கையில் டெங்கு பரவியிருக்கும்  பெரும்பாலான இடங்களில்  டெங்கு  தடுப்பு  நடவடிக்கையில் ஈடுபடலாம் என சுகாதார  அமைச்சு தெரிவிக்கின்றது .

Wednesday, September 8, 2010

இலங்கை வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஹம்பாந்தோட்டை துறைமுகம்

0 comments

இலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்” என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆகஸ்ட் 15. 2010 இல் திறந்துவைக்கப்பட்டது . இத்துறைமுகம் ‘தெற்காசியாவின் ஆழமான துறைமுகம்’ எனவும் கருதப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய’களப்பின் ஒரு பகுதியைச் சுழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்காக 14 கிலோ மீற்றர்களைக் கொண்ட இரு அலை தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கப்பல்கள் மூலம் ஆழமாக்கப்பட்டு அங்கிருந்து புதிய துறைமுகத்துக்குள் தண்ணீர் நிரப்பப்பகிடுகின்றன.

இத்துறைமுக முதல்கட்ட நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சீனக் கப்பல் பொருளியல் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. 39 மாதத்தில் நிறைவு செய்யப்படவிருந்த இத்திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளுர் பொருளியலாளர்களின் ஒத்துழைப்புடன் 30 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை முதல் கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளதோடு நவம்பர் மாதம் முதல்கட்டம் நிறைவுபெறும் போது இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல இத்துறை முகத்தை வரிகளற்ற ஒரு தொழில் நுட்ப துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்

உலக கடற் போக்குவரத்துத் துறையினை விரிவாக ஆராயும் போது ஏறக்குறைய 34,000 வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். எமது கண்தூரத்திற்கு அருகாமையில் எமது நாட்டை தவிர்ந்து செல்லும் இக்கப்பல்களில் ஏறக்குறைய 10,000 கப்பல்கள் மட்டுமே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான கப்பல்கள் இத்துறைமுகத்தை அண்மித்தே தமது பயணத்தை மேற்கொள்ளும். அப்போது இக்கப்பல்கள் இத்துறைமுகத்தை வந்து அடைவது இலகுவானதும் தவிர்க்கமுடியாததுமாக இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்கு மத்தியில்18 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது

0 comments


ngUk; ru;r;irf;F kj;jpap;y; 18 MtJ jpUj;jr;rl;lk; New;W ghuhSkd;wpy; %d;wpy; ,uz;L ngUk;ghd;ik thf;Ffshy; epiwNtw;wg;gl;lJ. ,jw;F Mjuthf 161 thf;FfSk; vjpuhf 17 thf;FfSk; toq;fg;gl;lJ.
If;fpa Njrpa fl;rpapd; 8 ghuhSkd;w cWg;gpdu;fSk; ,jw;F Mjuthf thf;fspj;jdu; ,tu;fSs; mg;Jy; fhju;> yf;];kd; nrdtpuj;d> Vu;d; FzNrfu> kD\ehzaf;fhu> epy;tsh tp[arpq;`> cngf;\h Rtu;zkhyp MfpNahu; New;W murhq;fj;Jld; ,ide;Jf;nfhz;ldu;.
18 MtJ jpUj;jr;rl;lk; New;W ghuhSkd;wpy; epiwNtw;wg;gl;lij mLj;J fhyp> khj;jiw> Nffhiy Nghd;w gpuNjrq;fspy; kf;fs; jq;fs; Mjuit njuptpj;jdu;. mNj Ntis [f;fpa Njrpa flrpapdu; jq;fs; vjph;g;G Mu;g;ghl;lj;ij elj;jpdu;.

   

Tuesday, September 7, 2010

சிறைக்கதிகளுக்கு மறுவாழ்வு

0 comments
இலங்கை  கம்யூனிஸ்ட் கட்சியின்  ஏற்பாட்டில் சிறைச்சாலை புனர்வாழ்வு அமைச்சர் ,பிரதி அமைச்சர்  மற்றும் சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகள் தலைமையில் இலங்கை மன்றத்தில் இன்று காலை பத்திரிகையாளர்  மாநாடு ஒன்று  இடம்பெற்றது .

Thursday, September 2, 2010

புதிய டைனோசர் வகை கண்டுபிடிப்பு

0 comments
டைனோசர்களில், றைனோசர்ஸ் றெக்ஸ் என்னும்வகை மிகவும் பிரபலமானது. 20 அடி உயரமும் மூக்கிலிருந்து வால் நுனி வரை அதே நீளமும் பார்க்கும் எல்லா மிருகங்களையும் பீதியடைய வைக்கும் இராட்சத தோற்றமுமாக காண்பபட்டது. பெரிய தலையும் வலிமையான கால்களும் சிறிய கைகளும் கொண்ட இந்த பயங்கரமான மிருகம் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்தது.

அண்மையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய டைனோசரின் எலும்பு கூடு ரைனோசர்ஸ் றெக்ஸின் தோற்றத்தை ஒத்திருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரியதலையும் வலிமையான கால்களும் இருந்தாலும் இப்புதிய டைனோசர் சிறிய உருவமாக காணப்பட்டப்படியால் இதற்கு றெப்ரோறெக்ஸ் கிறிகஸ்டினி என பெயரிட்டார்கள்.

இந்த விலங்கு மனிதனளவு தோற்றமாக இருப்பதைப் பார்த்து நாம் பெரிதும் அதிசயமடைந்தோம் என்கிறார் சிக்காகோ பல்கலைக்கழக இயற் பியல் ஆய்வாளர் போல் செரினோ.சிறிய றெப்ரோறெக்ஸிற்கும் இராட்சத ரைனோசர்ஸ் றெக்ஸிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை பார்த்து விஞ்ஞானிகள் பெரிதம் அதிசயப்பட்டனர்.இந்த சிறிய வகை றெப்ரோறெக்ஸ் விலங்கு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்பியல் ஆய்வாளர்கள்; தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.சுமார் 90 றெப்ரோறெக்ஸ விலங்குகளின் எடையே ஒரு ரைனோசர்ஸ் றெக்ஸ் மிருகத்தின் எடைக்கு சமமாக இருக்கும் என்கிறார் செரினோ.

இந்த இரண்டு வகை டைனோசர்களுக்கும் இடையே முக்கியமானதொரு வித்தியாசத்தை இயற்பியலாளர்கள் கண்டுப்பிடித்திருந்தனர் றெப்ரோறெக்ஸ் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்தது.அதாவது ரைனோசர்ஸ் றெக்ஸ் தோன்றுவதற்கு 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அவை தோன்றியிருந்தன.

ரைனோசர்ஸ் விலங்கின் மூதாதையர் றைப்ரோறெக்ஸ் ஆக இருந்திருக்லாம் பரிணாம வளர்ச்சி பெற்றே அவை இராட்சத உருவாக வளர்ச்சியடைந்திருக்கலாம். இருப்பினும் இரண்டு விலங்கினங்களும் தோன்றிய கால இடைவெளியிலுள்ள எச்சங்களை கண்டுபிடித்து அவற்றை ஆராய வேண்டும் என மேரிலாந்து பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வாரளர் தோமஸ் ஹொல்ஸ் கூறுகிறார்.

1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

0 comments
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களின் அவரது அரச வம்சத்தினை சார் என அழைப்பர். ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்ட போது சைபீரியாவும் ரஷ்யாவிற்கு கட்டுப்பட்டிருந்தது.சைபீரியாவில் அப்போதைய ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர்கோல்சோக் என்பவர் ரஷ்யாவிற்கு எதிராக உள்நாட்டு போரை அறிவித்தார்.ரஷ்யாவில் உள்நாட்டு குழப்பத்தினால் அந்நாட்டின் கடைசி சார் மன்னரிடமிருந்த பல ஆயிரம் கோடி மதிப்பிலான 16,00 டன் தங்கப்புதையலை கைப்பற்றி சைபீரியாவில் உள்ள உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படும் பைகால் ஏரியில் மறைத்து வைத்திருந்ததாகவும் ரஷ்யாவின் மிர்-2 என்ற நீர்முழ்கிக்கப்பல் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் இத்தகைய தங்கப்புதையலை கண்டுபிடித்தனர். கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையலை ஏரியின் பராமரிப்புப்பணிக்கு செலவிடப்படும் என சைபீரியா அறிவித்துள்ளது.
0 comments
எதிர்காலத்தில் சென்னையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் விமான நிலையத்தின் மாதிரி கட்டமைப்பு
 
Copyright © எதிர்வு