டைனோசர்களில், றைனோசர்ஸ் றெக்ஸ் என்னும்வகை மிகவும் பிரபலமானது. 20 அடி உயரமும் மூக்கிலிருந்து வால் நுனி வரை அதே நீளமும் பார்க்கும் எல்லா மிருகங்களையும் பீதியடைய வைக்கும் இராட்சத தோற்றமுமாக காண்பபட்டது. பெரிய தலையும் வலிமையான கால்களும் சிறிய கைகளும் கொண்ட இந்த பயங்கரமான மிருகம் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்தது.
அண்மையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய டைனோசரின் எலும்பு கூடு ரைனோசர்ஸ் றெக்ஸின் தோற்றத்தை ஒத்திருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரியதலையும் வலிமையான கால்களும் இருந்தாலும் இப்புதிய டைனோசர் சிறிய உருவமாக காணப்பட்டப்படியால் இதற்கு றெப்ரோறெக்ஸ் கிறிகஸ்டினி என பெயரிட்டார்கள்.
இந்த விலங்கு மனிதனளவு தோற்றமாக இருப்பதைப் பார்த்து நாம் பெரிதும் அதிசயமடைந்தோம் என்கிறார் சிக்காகோ பல்கலைக்கழக இயற் பியல் ஆய்வாளர் போல் செரினோ.சிறிய றெப்ரோறெக்ஸிற்கும் இராட்சத ரைனோசர்ஸ் றெக்ஸிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை பார்த்து விஞ்ஞானிகள் பெரிதம் அதிசயப்பட்டனர்.இந்த சிறிய வகை றெப்ரோறெக்ஸ் விலங்கு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்பியல் ஆய்வாளர்கள்; தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.சுமார் 90 றெப்ரோறெக்ஸ விலங்குகளின் எடையே ஒரு ரைனோசர்ஸ் றெக்ஸ் மிருகத்தின் எடைக்கு சமமாக இருக்கும் என்கிறார் செரினோ.
இந்த இரண்டு வகை டைனோசர்களுக்கும் இடையே முக்கியமானதொரு வித்தியாசத்தை இயற்பியலாளர்கள் கண்டுப்பிடித்திருந்தனர் றெப்ரோறெக்ஸ் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்தது.அதாவது ரைனோசர்ஸ் றெக்ஸ் தோன்றுவதற்கு 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே அவை தோன்றியிருந்தன.
ரைனோசர்ஸ் விலங்கின் மூதாதையர் றைப்ரோறெக்ஸ் ஆக இருந்திருக்லாம் பரிணாம வளர்ச்சி பெற்றே அவை இராட்சத உருவாக வளர்ச்சியடைந்திருக்கலாம். இருப்பினும் இரண்டு விலங்கினங்களும் தோன்றிய கால இடைவெளியிலுள்ள எச்சங்களை கண்டுபிடித்து அவற்றை ஆராய வேண்டும் என மேரிலாந்து பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வாரளர் தோமஸ் ஹொல்ஸ் கூறுகிறார்.
Thursday, September 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment