வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 167 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போதுள்ள சமாதானச் சூழலில் வடமேல் மாகாணத்தினூடாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்த விபத்துகள் சம்பவித்துள்ளதாக வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் லியூவ்கே குறிப்பிட்டார்.
இதனையடுத்துப் பாடசாலை ஆரம்பிக்க முன்னரும் நிறைவடைந்த பின்னரும் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் போக்குவரத்தில் சிறிய மாற்றத்தினைச் செய்யவுள்ளதாகவும் இது குறித்து மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் சொன்னார்.
Sunday, September 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment